வேப்பூர்: வேப்பூர் அருகே சேப்பாக்கத்தில் கார் விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த நாச்சியார்புரத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் அஜித் (27) மற்றும் அவரது மனைவி மதுமிதா இருவரும் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வாங்கிய புதுகாரை சொந்த ஊரில் தனது பெற்றோர்கள் வீட்டில் நிறுத்தி வைப்பதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு தனது மனைவி, குழந்தை மற்றும் மாமியாருடன் தேனி நோக்கி பயணித்துள்ளனர்.
அப்போது கார் நள்ளிரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூரை அடுத்த சேப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கோமுகி ஆற்றுப் பாலத்தின் தடுப்புக்கட்டையில் மோதி, சாலை ஓரம் இருந்த வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அஜித் அவரது மனைவி மதுமிதா (28) மற்றும் அவர்களது ஒன்றரை வயது மகள் ஜெனிலியாமிர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்த மாமியார் தமிழ்செல்வி (47) பலத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீஸார், படுகாமடைந்த தமிழ்செல்வி மீட்டு, வேப்பூர் அவசர சிகிச்சை மையத்திற்கு அனுப்பிவைத்த நிலையில், அவர் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்துக் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
16 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago