கோவை: கோவையை சேர்ந்த 19 வயது மாணவி, தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், குனியமுத்தூரை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக சஞ்சயுடன் பேசுவதை அந்த மாணவி தவிர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை மாணவி வழக்கம்போல் கல்லூரி முடிந்து, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். குனியமுத்தூரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்றிருந்த சஞ்சய், மாணவியை தடுத்து நிறுத்தி தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தினார்.
இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததால், சஞ்சய் ஆத்திரமடைந்தார். அந்த மாணவியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அந்த மாணவி, குனியமுத்தூர் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், சஞ்சயை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
26 mins ago
க்ரைம்
6 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago