வாணியம்பாடி, ஆம்பூரில் களைக்கட்டும் ‘காட்டன் சூதாட்டம்’ - ஏழை மக்களை மீட்க காவல் துறை முன்வருமா?

By ந. சரவணன்

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணி யம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் களைக்கட்டி வரும் ‘காட்டன் சூதாட்டத்தை’ அடி யோடு ஒழிப்பது மட்டுமின்றி காட்டன் சூதாட்டம் நடத்தி வரும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

மேலும், காட்டன் சூதாட்டத்தில் மூழ்கியுள்ள தொழிலாளர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆந்திர மாநிலத்தை தலைமை யிடமாக கொண்டு ‘காட்டன் சூதாட்டம்’ நடத்தப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர், துத்திப்பட்டு, உமராபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கூலித் தொழிலாளிகளை குறிவைத்து காட்டன் சூதாட்டம் அதிகளவில் நடத்தப்படுகிறது.

குறிப்பாக, ஆம்பூர் மற்றும் துத்திப்பட்டு பகுதிகளில் கூலி த்தொழிலாளர்களின் ரத்தத்தை அட்டைப்போல உறிஞ்சி எடுக்கும் காட்டன் சூதாட்டம் தவிர்க்க முடியாத தொழிலாக மாறிவிட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தனித் தனியாக காட்டன் சூதாட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட காவல் நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை இதுவரை எடுக்காததால், இத் தொழில் பரந்து விரிந்துள்ளன.

உழைப்பின் அருமையை உணராமல் நாளெல்லாம் கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தை இரட்டிப்பாக்க ஆசைப்பட்டு, சம்பாதித்த சொற்ப பணத்தையும் காட்டன் சூதாட்டத்தில் தவற விடும் நபர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் சமீபகாலமாக பெருகி விட்டனர்.

ஒரு ரூபாய் கட்டினால் 70 ரூபாய் தரப்படும் என்றும், 70 ரூபாய் கட்டினால் 700 ரூபாய் வழங்கப்படும் என கவர்ச்சி கரமான விளம்பரங்களை அறிவித்து ஏழை, எளிய மக்களை காட்டன் சூதாட்ட வலையில் இடைத்தரகர்கள் வீழ்த்தி, அதன் மூலம் லட்சக்கணக்கான பணத்தை சம்பாதித்து வருவதாகவும், இதை தடுக்க வேண்டிய மாவட்ட காவல் நிர்வாகம், இடைத்தரகர்களை மட்டும் கைது செய்து காட்டன் சூதாட்டம் நடத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது வேதனையளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறு கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையம், துத்திப்பட்டு, புது மனை மேடு, ஆம்பூர் புறவழிச் சாலை, வடபுதுப்பட்டு, உமரா பாத், மாராப்பட்டு, மின்னூர், நாயக்கனேரி மலைப்பகுதிகளில் காட்டன் சூதாட்டம் ஒளிவு, மறை வின்றி நடத்தப்படுகிறது.

ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் தினசரி காலை 6 மணிக்கு சூதாட்டம் தொடங்குகிறது. கூலி தொழிலாளிகள், தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் தொழிலாளர்களை குறி வைத்து இத்தொழில் நடத் தப்படுகிறது. ஆந்திராவில் நள்ளிரவு குலுக்கல் நடைபெற்று, அதன் முடிவுகள் தொலைபேசி மூலமாகவும், வாட்ஸ்-ஆப் செயலி மூலமாக இடைத்தரகர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் மறு நாள் காலை குலுக்கலில் எந்த எண்ணுக்கு பரிசு (காட்டன் எண்) விழுந்துள்ளது என்பதை வாடிக்கையாளர்களுக்கு கைபேசி மூலமாகவே தெரிவிக்கின்றனர். பரிசுத் தொகை ஜிபே, போன்பே, பே.டி.எம் மூலமாக வழங்கும் அளவுக்கு தங்களது தொழிலை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆயிரக்கணக்கான தொழி லாளர்களிடம் இருந்து வசூலிக் கப்படும் பணம் ஒரு நபருக்கு மட்டுமே பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. அதிலும், வசூலித்த தொகையில் 1 பங்கு மட்டுமே பரிசுத்தொகையாக வழங்கும் காட்டன் முதலாளிகள் பல லட்சம் ரூபாயை லாபமாக சம்பாதித்து பெரும் பணக்காரர் களாக வலம் வருகின்றனர். குறைந்த தொகை தானே கட்டுகிறோம்,

அதிர்ஷ்டம் இருந் தால் பரிசுத் தொகை இரட்டிப்பாக கிடைக்கும் என அவ நம்பிக்கையில் நாளெல்லாம் வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தை ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளிகள் காட்டன் சூதாட்டத்தின் மேலுள்ள மோகத்தால், சம்பாதிக்கும் பணம் முழு வதையும் காட்டன் சூதாட்டத்தில் அழித்து வரும் தொழிலாளர்களை அதிலிருந்து மீட்டெடுக்க மாவட்ட காவல் நிர்வாகம் முன்வர வேண்டும்.

தமிழகத்தில் லாட்டரி சீட்டு, ஒரு நம்பர் லாட்டரி, குலுக்கல் பரிசு, காட்டன் சூதாட்டம் உள்ளிட்டவைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இருந்தாலும், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் காட்டன் சூதாட்டம் மட்டுமில்லாமல் பம்பர் பரிசு குலுக்கல் என்ற மோசடியும் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

இதை கண்காணித்து தடுக்க வேண்டிய காவல் துறையினர் மறைமுகமாக காட்டன், லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் பம்பர் பரிசு குலுக்கலுக்கு ஆதரவு தெரி விக்கின்றனர். ஒரு நாளைக்கு 3 முறை பரிசு குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு தொகை பிரித்து வழங்கப்படுகிறது.

காட்டன் சூதாட்டம் மீதான மோகம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதால், ஆண்களை தொடர்ந்து பெண்களும் காட்டன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து வருகின்றனர். எனவே, காவல் துறையினர் காட்டன் இடைத் தரகர்களை கைது செய்வதை விட்டுவிட்டு, காட்டன் சூதாட்டம் நடத்தும் பெரும் முதலாளிகளை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜானிடம் கேட்க முயன்றபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து, ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் கேட்டபோது, ‘‘ஆம்பூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் காட்டன் சூதாட்டம் 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களில் காட்டன் சூதாட்ட வழக்கில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்பூர் பகுதிகளில் நடப்பதாக இருந்தால் பொதுமக்கள் தயங் காமல் புகார் அளிக்கலாம். அதன் பேரில், நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம். இனி, காட்டன் சூதாட்டம் நடக்க வாய்ப்பே இல்லை’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்