தமிழக போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர் சென்னை விமான நிலையத்தில் கைது: இலங்கையிலிருந்து சென்னை வந்தபோது பிடிபட்டார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர் இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தபோது பிடிபட்டார். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் திவான் என்ற அக்பர். இவரை, கடந்த 2020-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள்போல் நடித்து, கும்பல் ஒன்று கடத்தியது. திவானிடமிருந்து சுமார் ரூ.2 கோடி பணத்தை பறித்து தப்பியது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தவ்பிக் (45) என்பவரின் மனைவி உள்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட தவ்பிக் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால், அவரைப் பிடிக்கசென்னை போலீஸார் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கிஇருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து சென்னை வந்த தவ்பிக்கை விமானநிலைய அதிகாரிகள் பிடித்து சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தொழிலதிபர் கடத்தலுக்கு பிறகு ரூ.2 கோடி பணத்துடன் வங்கதேசம் சென்று தலைமறைவானது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘கொள்ளையடிக்கும் பணத்தில் வெளிநாடுகளுக்கு சென்று உல்லாசமாக இருப்பதைதவ்பிக் வழக்கமாக கொண்டிருந்தார். பணம் தீர்ந்த பிறகு மீண்டும்கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தொழிலதிபர் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த தவ்பிக், 3 ஆண்டுகளுக்குப் பிறகு யாருக்கும் தெரியாமல் சென்னை வந்தபோது எங்களிடம் சிக்கியுள்ளார். தவ்பீக் மீது 15-க்கும்மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குறிப்பாக 2002 முதல் 2008 வரை பல தீவிரவாத அமைப்புகளுக்கு தவ்பிக் உதவியதாக அவர் மீதுபுகாரும் உள்ளது. 2002-ல் மும்பையில் நடந்த பேருந்து குண்டுவெடிப்பில் சிக்கினார். அதன் பின்புசிறையில் இருந்து வெளியே வந்தவர், தமிழகத்தில் அரசியல் கட்சியை தொடங்கி செயல்பட்டு வந்தார்.

பாதுகாப்பு படை என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் பயங்கரவாத கும்பலுக்கு ஆள் சேர்க்கும் பணியிலும், நிதிதிரட்டும் வேலையிலும் ஈடுபட்டதாக கூறி தவ்பிக் மீது என்ஐஏவழக்குப் பதிந்தது. மேலும் ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு தீவிரவாத அமைப்புகளுக்கு உதவியது விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றார். இதனையடுத்து தவ்பிக்கிடம் என்ஐஏ அதிகாரிகளும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE