ஜாபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் லஞ்சம் வாங்கிய வருவாய்த் துறை ஊழியர் ஒருவர், போலீஸாரைக் கண்டதும் அந்தப் பணத்தை அப்படியே மென்று விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது.
அந்த மாநிலத்தில் உள்ள கட்னி பகுதியில் கஜேந்திர சிங் என்பவர் வருவாய்த் துறையில் பணியாற்றி வருகிறார். அந்தப் பகுதியில் உள்ள பர்கேடா (Barkheda) கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வருவாய்த் துறை சார்ந்த பணிக்காக கஜேந்திர சிங்கை அணுகியுள்ளார். அவரோ அந்த வேலையை செய்து கொடுத்த 5,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் எனச் சொல்லியுள்ளார்.
இது தொடர்பாக லோக் ஆயுக்தா போலீஸ் பிரிவுக்கு பாதிக்கப்பட்ட பர்கேடா கிராமத்தைச் சேர்ந்தவர் புகார் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அவரை கையும் களவுமாக பிடிக்க அவர் கேட்ட பணத்தை கிராமவாசியிடம் போலீஸார் கொடுத்துள்ளனர். அவருடன் போலீஸாரும் கஜேந்திர சிங்கின் தனிப்பட்ட அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். 5,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட கஜேந்திர சிங் போலீஸாரை பார்த்ததும் அதை அப்படியே மென்று விழுங்கி உள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
» நாட்டிலேயே முதல் மாநிலமாக ராஜஸ்தானில் குறைந்தபட்ச வருமான உறுதி திட்டம் நிறைவேற்றம்
» உத்தர பிரதேசத்தின் கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த தடை
முக்கிய செய்திகள்
க்ரைம்
49 mins ago
க்ரைம்
8 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago