கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது @ சென்னை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விருகம்பாக்கம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் பகுதிக்குட்பட்ட அபுசாலி சாலையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் வாகன பதிவெண் இல்லாமல்‌ வந்த இருசக்கர வாகனத்தை மடக்கிய போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அதில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரவாயல் பகுதியை சேர்ந்த பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள் என்பதும், கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்