கமுதி: கமுதி அருகே காதலித்து திருமணம் செய்ய மறுத்தவரை, 20 ஆண்டுகளுக்கு பின் அரிவாளால் வெட்டிய பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள ஆரப்பத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் வேதமாணிக்கம் மகன் மாணிக்கம் (45). அதே ஊரைச் சேர்ந்த செல்லையா மகள் கிரேஸ் (43). உறவினர்களான இவர்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். ஆனால், மாணிக்கம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால், அவ்வப்போது மாணிக்கம் குடும்பத்தாருடன் கிரேஸ் சண்டையிட்டு வந்தார்.
இந்நிலையில், அபிராமம் வாரச்சந்தை அருகே நின்று கொண்டிருந்த மாணிக்கத்தை அவதூறாகப் பேசியதுடன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரது கையில் வெட்டிவிட்டு கிரேஸ் தப்பிச் சென்றுவிட்டார். உடனே, அருகில் இருந்தவர்கள் மாணிக்கத்தை மீட்டு, கமுதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து அபிராமம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிரேஸை தேடி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, இதுநாள் வரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் கிரேஸ், தான் காதலித்தவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அபிராமம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
22 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago