சென்னை: ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்காமல் இருக்க மதுபோதை வாகனஓட்டியிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட மெரினா போலீஸார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மெரினா பகுதியில் மெரினா காவல் நிலைய போலீஸார் வெங்கடேஷ், யுவராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் தள்ளாடியபடி இருந்தார். இதனால், சந்தேகம் அடைந்த போலீஸார், அவரை மது போதையை கண்டறியும் ‘பிரீத் அனலைசர்’ கருவியில் ஊதவைத்தனர். இதில், அந்த வாகன ஓட்டி மது அருந்தியது தெரியவந்தது.
செல்போன் பறிப்பு: இதையடுத்து வாகனத்தின் சாவி மற்றும் வாகனத்தை ஓட்டிவந்தவரின் செல்போனை போலீஸார் பறித்தனர். பின்னர், அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க ஆயத்தம் ஆனார்கள். தொடர்ந்து அந்த வாகனஓட்டியை தனியாக அழைத்துச் சென்று ரூ.4 ஆயிரம் கொடுத்தால் வழக்கு பதியாமல் போனையும், வாகனத்தையும் ஒப்படைத்து விடுவதாக தெரிவித்தனர். இதனால், சுதாரித்துக் கொண்டஅந்த வாகன ஓட்டி ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த மற்றொரு செல்போனில் நடந்த சம்பவம் முழுவதையும் வீடியோவாக பதிவு செய்தார். பின்னர், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆணையர் உத்தரவு: இறையறிந்த கூடுதல் காவல் ஆணையர் (சென்னை தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி, கிழக்குமண்டல இணை ஆணையர்திஷா மித்தல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், போலீஸார் லஞ்சம்கேட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கூடுதல் ஆணையர் பரிந்துரையின்பேரில், வெங்கடேஷ், யுவராஜ் ஆகிய இரு போலீஸாரையும் சென்னை காவல்ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பணியிடை (சஸ்பெண்ட்) நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago