சென்னை: சென்னை வேளச்சேரியில் போலி பட்டா மூலம் ரூ.71 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்தவர் லட்சுமணன். சென்னையில் சொத்துவாங்க முடிவு செய்த அவர்,புரோக்கர் ராஜா என்பவர் மூலம் வேளச்சேரி, ராமகிரி நகர், 2-வது தெருவில் 5 வீடுகள் இருந்த இடத்தை பார்த்துள்ளார்.
அந்த இடத்தின் சொந்தக்காரர்களான பிரியாவிஷா, அவரது கணவர் ஷாகுல்ஹமீத், காஜா மொய்தீன், மொய்தீன் அப்துல் காதர் ஆகியோரை சந்தித்து ரூ.2.10 கோடிக்கு பேசி முடித்துள்ளார்.
அதில், ரூ.71 லட்சம் கொடுத்து விற்பனை ஒப்பந்தம் செய்துள்ளார். இடத்துக்கான பட்டாவை பார்த்தபோது, பட்டா அவர்கள் பெயரில் இல்லாமல் இருப்பதும், 2400 சதுர அடிக்கு 1,506 சதுர அடிக்கு மட்டுமே பட்டா இருப்பதும் தெரியவந்துள்ளது.
போலி பட்டாவை கொடுத்து ரூ.71 லட்சம் பெற்று கொண்டு, இடத்தை பத்திரப்பதிவு செய்து தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் இருந்ததால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு லட்சுமணன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரியாவிஷா மற்றும் அவரது கணவர் ஷாகுல் ஹமீது ஆகியோர் திட்டமிட்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 hours ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago