ஸ்ரீவில்லிபுத்தூரில் 5.9 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 இளைஞர்கள் கைது

By செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், 4 இளைஞர்களை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (22). இவர், திண்டுக்கல்லில் 5.9 கிலோ கஞ்சாவை வாங்கி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்தார். அங்கு தனது நண்பர்களான கம்மாபட்டியைச் சேர்ந்த ஹரி ஹரசுதன் (23), ரெங்க நாதபுரத்தைச் சேர்ந்த போத்தி ராஜ் (26), கண்ணன் காலனியை சேர்ந்த சரண் குமார் (24), கம்மாபட்டியைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோருடன் சேர்ந்து விற்பனை செய்வதற்காக கொண்டுசென்றார்.

அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சீனியாபுரம் விலக்கு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீஸார், சதீஷ் குமார், ஹரி ஹரசுதன், போத்தி ராஜ், சரண் குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 5.9 கிலோ கஞ்சா, ரூ.1,700 பணம் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். நாகராஜ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்