போபால்: மத்திய பிரதேசத்தில் ரூ.60,000 கடனுக்காக மளிகை வியாபாரியை அவரது உறவினரே வெட்டி கொன்றனர்.
இதுகுறித்து தலைமை காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்வேதா குப்தா கூறியதாவது: மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவேக் சர்மா. மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த புதன்கிழமை காலை விவேக்கும், அவரது மகன் ராஜ்குமாரும் கடையில் இருந்துள்ளனர். காலை 11 மணியளவில் வெளியில் சென்ற விவேக் திரும்பி வரவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில் விவேக்கின் ஸ்கூட்டர் சிங்வாசா குளத்தின் அருகே இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் விவேக்கின் உறவினர் மோஹித் இந்த கொலையை செய்துள்ளார். ரூ.60,000 கடன் பிரச்சனைக்காக இந்த கொலை நிகழ்ந்துள்ளது. மோஹித் தனது மைத்துனரின அரசு குடியிருப்பு வளாகத்துக்கு அழைத்து சென்று விவேக்கை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் உடல் பாகங்களை பாலத்தீன் கவர்களில் மறைத்து கோபி சாகர் அணைப் பகுதியில் குழிதோண்டி புதைத்துள்ளார்.
அடையாளம் காட்டப்பட்ட இடத்திலிருந்து உடல் பாகங்கள் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
13 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago