ரயில் படியில் அமர்ந்து செல்வதில் தகராறு: மதுபோதையில் இருந்த 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

விருதுநகர்: விருதுநகர் அருகே நேற்று மதுபோதையில், ரயில் படியில் அமர்ந்து செல்வதில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் தவறி விழுந்து உயிரிழந்தனர்.

நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் விரைவு ரயிலில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த ரயிலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32), கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (38) ஆகியோர் மது போதையில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று விடுமுறை நாள் என்பதால் ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், முத்துக்குமாருக்கும் மாரியப்பனுக்கும் இடையே படியில் அமர்ந்து செல்வது தொடர்பாக வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விருதுநகர்- சாத்தூர் இடையே உள்ள துலுக்கப்பட்டிக்கு ரயில் வந்தபோது, முத்துக்குமாரும் மாரியப்பனும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தனர். சக பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

படுகாயமடைந்த முத்துக்குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மாரியப்பன் வழியிலேயே உயிரிழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

க்ரைம்

9 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்