சென்னை | தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி கையாடல்: தலைமறைவான ஊழியர் நண்பருடன் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடிகையாடல் செய்த ஊழியரை நண்பருடன் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தரமணி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி வரை கையாடல் நடந்திருப்பதாக, அந்நிறுவனத்தின் மேலாளர் ரமேஷ் சொக்கலிங்கம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு அந்நிறுவனத்தில் கணக்காளர் பணியில் சேர்ந்த அகஸ்டின் சிரில் என்பவர், அவருடைய மென்பொருள் கணக்கின் பயனர் ஐடியைப் பயன்படுத்தி, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற வெளிநாடுகளில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பிப்ரவரி வரை பல பொய்யான கட்டண கோரிக்கையை தனது கணினியில் உருவாக்கி, அதன்மூலம் சுமார் ரூ.5 கோடி கையாடல் செய்தது தெரியவந்தது.

மேலும், இந்த பணத்தை வெளிநாடுகளில் உள்ள தனது நண்பர்களுக்கு அனுப்பி, அங்கிருந்து தனது உறவினர்களின் வங்கி கணக்குக்கு அந்த பணத்தை அனுப்பியதும், இந்த முறைகேட்டில் அவரது நண்பரான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராபின் கிறிஸ்டோபர்(26) உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, பரமக்குடியில் தலைமறைவாக இருந்த ராபின் கிறிஸ்டோபரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து, அவரிடம் இருந்து 215 பவுன் நகை, ரூ.6 லட்சம் பணம், ஒரு கார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த அகஸ்டின் சிரிலையும் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

க்ரைம்

13 days ago

மேலும்