சென்னை: சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
மோசடி புகார் எழுந்ததையடுத்து, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 21 பேர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அந்நிறுவனம் ஒரு லட்சத்து 9,255 பேரிடம் ரூ.2,438 கோடி முதலீடு பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் நிறுவனரான சென்னை வில்லிவாக்கம் ராஜசேகர் உள்ளிட்ட 5 பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் நிறுவனத்தின் இயக்குநர்களின் ஒருவரான தீபக் கோவிந்த் பிரசாத் சென்னை போரூரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், போலீஸார் விரைந்து சென்று தீபக் பிரசாத்தை கைது செய்தனர். அவரை அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர், ராஜசேகருடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
7 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago