மனைவியை கொன்று தலைமறைவு - 2 ஆண்டுக்கு பிறகு சாமியார் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: மனைவியை கொலை செய்து விட்டு 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாணி என்பவரும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கவுதம், ஹரிஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேக மடைந்த ரமேஷ் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரை கொலை செய்து விட்டு, தலை மறைவானார். இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவரை போலீஸார் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் ரமேஷ் சாமியாராக மாறி கோயில்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், ரமேஷ், டெல்லியில் உள்ள ஒரு ஆசிரமத்துக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் செல்ல இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை, ரயில் நிலையம் அருகே வந்த ரமேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்