வழிப்பறி வழக்கில் 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை - ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: வழிப்பறி வழக்கில் 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(37). இவர் கடந்த 2016-ம் ஆண்டு மே 8-ம் தேதி இரவு பணி முடிந்து விட்டிற்கு சென்றார். அப்போது ஈஞ்சார் சாலையில் சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்து 1 1/4 பவுன் தங்க செயின், செல்போன், ரூ.130 பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்தனர்.

இதுகுறித்து புகாரில் மல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சித்துராஜபுரத்தை சேர்ந்த அழகுராஜ்(26), முனீஸ் நகரை சேர்ந்த பாலசங்கர்(26), துலக்கப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி(29) மற்றும் சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி செல்வன் ஜேசுராஜ், குற்றவாளிகள் அழகுராஜூக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,500 அபராதமும், பாலசங்கர், கருப்பசாமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 mins ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

22 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

மேலும்