சென்னை: சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர்ராஜன் (52). எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுநராக 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த அவர் அறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரம் அறையிலிருந்து வெளியே வராததால், சக ஊழியர்கள் சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார்.
புகாரின்பேரில் எழும்பூர் போலீஸார் மருத்துவமனைக்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜன் எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், `எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தற்கொலைசெய்து கொள்கிறேன்; என்னை மன்னிக்கவும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெயிண்டர் உயிரிழப்பு: சென்னை அரும்பாக்கத்தில் பிரபலமான நட்சத்திர விடுதி ஒன்றுஉள்ளது. இதன் வளாகத்தில்2 மாடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு பெயிண்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஜய் (18) என்ற இளைஞர் உள்பட மேலும் சிலர்பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்றுஅதிகாலை அவர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 2-வது மாடியிலிருந்து விஜய் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே இறந்தார். சூளைமேடு போலீஸார் விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago