தருமபுரி | மான் இறைச்சி வத்தல் வைத்திருந்த தந்தை, மகனை கைது செய்த வனத்துறை

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சரகத்தில் மான் இறைச்சி வைத்திருந்த இருவருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

பென்னாகரம் வனச் சரகத்துக்கு உட்பட்ட சிடுவம்பட்டி அடுத்த புதுக்காடு கிராமத்தைச் சேர்ந்த அல்லிமுத்து(55), அவர் மகன் சேகர்(33) ஆகியோர் வீட்டில் மான் இறைச்சி வைத்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உத்தரவின் பேரில் வனத்துறைக்கான சிறப்புப் படையும் பென்னாகரம் வனச் சரகர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினரும் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அல்லிமுத்து, சேகர் ஆகிய இருவரும் ஆடு மேய்க்க வனப்பகுதிக்கு சென்றபோது மான் ஒன்று இறந்து கிடந்ததாகவும், அதை எடுத்து வந்து இறைச்சி வத்தல் தயாரித்து வீட்டில் வைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். அதைத் தொடர்ந்து இருவரையும் வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் முன்பு இன்று( ஜூலை1-ம் தேதி) ஆஜர்படுத்தினர். அவர், இருவருக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதித்ததுடன், கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்