ஆலங்குளம் அருகே நிலப் பிரச்சினையில் வழக்கறிஞர் உட்பட 2 பேர் கொலை: ராணுவ வீரர் உள்ளிட்ட 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் அசோக் குமார்(29). வழக்கறிஞரான இவருக்கு திருமணமாகவில்லை.

சின்னதுரை குடும்பத்துக்கும், இவரது எதிர் வீட்டில் வசிக்கும் குழந்தை பாண்டி என்பவரது குடும்பத்துக்கும் இடையே நிலப் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நிலப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார்கள் அளித்துள்ளனர்.

இந்த பிரச்சினையில் சின்னதுரைக்கு ஆதரவாக அவரது அண்ணன் துரைராஜ் (55) பேசியுள்ளார். குழந்தை பாண்டியின் மகன் சுரேஷ் (27) அருணாசலப் பிரதேசத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர், சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் சின்னதுரைக்கு சொந்தமான வைக்கோல் போருக்கு தீ வைக்கப்பட்டது.

இது தொடர்பாக சுரேஷ் தரப்பினர் மீது சின்னதுரை தரப்பினர் ஆலங்குளம் போலீஸில் புகார் தந்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தரப்பினர், நேற்று முன்தினம் இரவு சாலையில் நின்ற துரைராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர், அசோக் குமாரை அவரது வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துரை ராஜ் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, கொலையாளிகளை கைதுசெய்யக் கோரி அசோக்குமாரின் உறவினர்கள் நெட்டூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

வழக்கறிஞர்கள் போராட்டம்: இந்நிலையில், வழக்கறிஞர் கொலையைக் கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்யகோரியும் தென்காசியில் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, திருநெல்வேலி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தென்காசி எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியலை அவர்கள் கைவிட்டனர்.

இரட்டை கொலை சம்பவத்தில் சுரேஷ், இவரது தந்தை குழந்தை பாண்டி (65), சுரேஷின் உறவினர்கள் முருகன்(39), மகாராஜன் (35) ஆகியோரை ஆலங்குளம் போலீஸார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

14 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

16 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்