செங்கல்பட்டு அருகே பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

By செய்திப்பிரிவு

மதுராந்தகம்: செங்கல்பட்டு, புக்கத்துறையை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் பாஜக பிரமுகர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக படாளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், புக்கத்துறையை அடுத்த சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் நீலகண்டன் (35). இவர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், அப்பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய ஆதரவாளராகவும் விளங்கி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 24-ம் தேதி இவரது இருசக்கர வாகனம், வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தபோது நள்ளிரவில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, செங்கல்பட்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததால், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இது தொடர்பாக, மர்ம நபர்கள் தனது இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்ததாகவும். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, படாளம் காவல் நிலையத்தில் நீலகண்டன் புகார் அளித்தார். இந்நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது வீட்டின் வாசலில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது.

இதில், அப்பகுதியில் இருந்த பேனர் தீப்பற்றி எரிந்ததாக தெரிகிறது. தகவல் அறிந்த படாளம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

மேலும்