சக பணியாளரை கொன்றவருக்கு ஆயுள்: செங்கை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: சக பணியாளரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன்(65). புலிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இருவரும் பல்லாவரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், ஒன்றாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், மனோகரனை கீழே தள்ளிவிட்டு சக்திவேல் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், தலையில் பலத்த காயம் அடைந்த மனோகரன் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பல்லாவரம் போலீஸார் சக்திவேலை கைது செய்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணை செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கு விசாரணை நேற்று முடிவடைந்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட சக்திவேல் மீதான குற்றம் உறுதிபடுத்தப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி காயத்ரி தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில், அரசு சார்பில் வழக்கறிஞர் வையாபுரி ஆஜராகி வாதிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

மேலும்