மேடவாக்கம்: மேடவாக்கம் அருகே, கட்டாய திருமணம் செய்து வைக்க இருந்த 15 வயது சிறுமியை போலீஸார் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேடவாக்கம், முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி லட்சுமி. இவர்களின் 15 வயதான மகள், 10-ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் குமாரும், லட்சுமியும், தங்கள் மகளை, துறையூரைச் சேர்ந்த உறவினர் மணிவேல் (26) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். புதன்கிழமை (இன்று) காலை, திருமணம் நடக்க இருந்த நிலையில், சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் போலீஸார் உதவியுடன் சிறுமியை பத்திரமாக மீட்டு, பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில்,சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது உண்மை என தெரியவர, செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் சிறுமியை ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை, உறவினர்களிடம் குழந்தை நல அலுவலர் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
14 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago