ஆவடி: சென்னை, கொரட்டூர் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ் (52). தனியார் மருத்துவமனை ஊழியரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து கொரட்டூர் போலீஸார் நடத்திய விசாரணையில், சுவாமிதாஸுடன் இருந்த தவறான நட்பு காரணமாக, சுவாமிதாஸ் வீட்டின் பணிபெண்ணாக இருந்த லட்சுமி (32), தன் ஆண் நண்பர் முகமது இர்பான் (35) என்பவருடன் சேர்ந்து, சுவாமிதாஸை கொலை செய்தது தெரிந்தது.
இதையடுத்து, லட்சுமி,முகமதுஇர்பான் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சிறையில் இருந்து 2017 -ம் ஆண்டு பிணையில் வெளியே வந்தமுகமது இர்பான், லட்சுமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தனர். அவர்களை பிடிக்க பூந்தமல்லி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இதை தொடர்ந்து, கடந்த வாரம் கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த லட்சுமியை கொரட்டூர் போலீஸார் கைதுசெய்தனர். லட்சுமி அளித்ததகவலின் அடிப்படையில், கொரட்டூர் போலீஸார் டெல்லிவிரைந்து, அங்கு முகமதுஇர்பானை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
14 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago