தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபரிடம், வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க, 6 கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், 10 லட்சம் ரூபாயை முன்பணமாக வாங்கியதாக இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்களான இருவரும் நிதி நிறுவனம், கிரிஷ் பால் பண்ணை உள்ளிட்ட தொழில்களைச் செய்து வந்தனர்.
சொந்த ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால், `ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்பட்டனர். ஹெலிகாப்டர் பிரதர்ஸ், தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பாகப் பணம் திருப்பித் தரப்படும் என வணிகர்கள், தொழிலதிபர்கள் , பொதுமக்கள் எனப் பலரையும் குறிவைத்து நிதி வசூல் செய்தனர். ஆரம்பத்தில் சொன்னதுபோலவே பணத்தைத் திருப்பித் தந்ததால், பலரும் தாமாக முன்வந்து அவர்களின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
முதலில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதியினர், கணேஷ், சுவாமிநாதன் சகோதரர்கள் எங்களிடம் 15 கோடி மோசடி ரூபாய் செய்துவிட்டதாக, கடந்த 2021-ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கணேஷ், சுவாமிநாதன் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
» தாமத கட்டணங்களுக்கான மேல் வரி மாதத்துக்கு 1.25% இருந்து 1% ஆக குறைப்பு: சென்னை குடிநீர் வாரியம்
» மத்திய அரசின் மின்சார திருத்த விதிகளை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
இந்நிலையில், கணேஷ் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில், கணேஷ் அங்கு தனியார் லாடஜ் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது, பூதலுார் எஸ்.ஐ.,யாக இருந்த கண்ணன், கடந்த 2021ம் ஆண்டு ஏப்.17 ம் தேதி, லாட்ஜ்க்கு சென்று கணேஷிடம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ரகு பிராசத் மற்றும் சீனிவாசன் என்பவர்களுக்கு 2 கோடியே 38 லட்சம் பணம் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளனர். அதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பிறகு மறுநாள் அப்போது சிறப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சோமசுந்தரம், கண்ணன் இருவரும் மீண்டும், கணேஷை லாட்ஜில் சந்தித்து, இரண்டு புகார்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்கவும், மேலும் மோசடி வழக்கில் விசாரணை நடத்தாமல் இருக்கவும் 6 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அத்துடன் முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் பணத்தை தர கோரியுள்ளனர். கணேஷிடமிருந்து ஏப்.19ம் தேதி 5 லட்சமும், 29ம் தேதி 5 லட்சமும் பணத்தை சோமசுந்தரமும், கண்ணன் இருவரும் பெற்றுள்ளனர். இது குறித்து விசாரணையில் தெரியவர, லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக தற்போது மயிலாடுதுறை சிறப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட உள்ள இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் பந்தநல்லுார் இன்ஸ்பெக்டராகவும், கண்ணன் திருவாரூரிலும் பணியாற்றி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago