திருவேற்காட்டில் கடத்தப்பட்டவர் பொன்னமராவதியில் மீட்பு: 4 பேர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவேற்காடு அருகே கத்திமுனையில் காரில் கடத்தப்பட்ட இசைக் கலைஞரை பொன்னமராவதியில் போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையை சேர்ந்தவர் தேவ் ஆனந்த் (29). பாப் இசைக் கலைஞரான இவர் நண்பர்களுடன் சேர்ந்து இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில், தேவ் ஆனந்த், நேற்று முன் தினம் இரவு சென்னை- நுங்கம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் 5 நண்பர்களுடன் சேர்ந்து இசை கச்சேரி நடத்தினார்.

அந்த கச்சேரியை முடித்து விட்டு, இரு நண்பர்களை திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள அவர்களது வீட்டில் விட காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, கார், தாம்பரம் - புழல் புறவழிச் சாலையின் அணுகு சாலையில், திருவேற்காடு அருகே அயனம்பாக்கம் பகுதியில் சென்றபோது, அங்கு இரு கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், தேவ் ஆனந்த் காரை வழி மறித்து, தேவ் ஆனந்தை கத்திமுனையில் காரை விட்டு இறக்கி, தங்கள் காரில் கடத்திச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தேவ் ஆனந்தின் நண்பர்கள் ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில், திருவேற்காடு போலீஸார் சம்பவ இடம் விரைந்து முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டனர். அவ்விசாரணையில்,`தேவ் ஆனந்த்தின் அண்ணன் சிரஞ்சீவி மதுரையில் சீட்டு கம்பெனி நடத்தி, பலருக்கு பணத்தை திருப்பி அளிக்காமல் சுமார் ரூ.3 கோடி வரை மோசடி செய்துள்ளார்.

பணத்தை இழந்தவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிரஞ்சீவி கிடைக்காததால், அவரது தம்பி தேவ் ஆனந்த் சென்னைக்கு கச்சேரிக்கு வந்திருப்பதை அறிந்து ,பின் தொடர்ந்து வந்து அவரை கடத்திச் சென்றது' தெரியவந்தது.

இது குறித்து, திருவேற்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தேவ் ஆனந்த் மற்றும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில், திரைப்படப் பாணியில் கடத்தல் காரை போலீஸார் சுற்றி வளைத்து, துப்பாக்கி முனையில் கடத்தல் கும்பலை சேர்ந்த முத்துப்பாண்டி, கார்த்தி, முத்து, கருப்பசாமி ஆகிய 4 பேரை பிடித்து, அவர்களிடம் இருந்து தேவ் ஆனந்தை மீட்டனர்.

தொடர்ந்து, போலீஸார் தேவ் ஆனந்த் மற்றும் கடத்தல்காரர்களை திருவேற்காடு காவல் நிலையத்துக்கு காவல் வாகனத்தில் அழைத்து வருகின்றனர். மேலும், இந்த கடத்தல் தொடர்பாக 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

13 days ago

மேலும்