மதுரை: மதுரை மாவட்டம், மேலூரில் வயதான தந்தைக்கு பராமரிப்புத் தொகை ரூ. 5 ஆயிரம் வழங்க தவறிய மகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலூர் கோமதியாபுரத்தைச் சேர்ந்தவர் இளமாறன் (83). இவருக்கு, அண்ணாத்துரை என்ற ஒரு மகன் மற்றும் மகள்கள் உள்ளனர். தனது பெயரில் இருந்த சொத்துகளை பெற்றுகொண்ட மகன், மகள்கள், தன்னை முறையாக பராமரிக்க தவறியதாக இளமாறன் மதுரை ஆட்சியரிடம் கடந்த ஆண்டு புகார் அளித்தார்.
அதையடுத்து, மூத்த குடிமகன் பராமரிப்புச் சட்டத்தின்படி விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேலூர் ஆர்டிஒ-வுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, ஆர்டிஓ விசாரணை நடத்தினார். இந்நிலையில், கடந்த 2022 நவம்பர் 28-ம் தேதி முதல் மகன் மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.5 ஆயிரத்தையும், மகள்கள் 2,500 ரூபாயையும் தந்தைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மகள்கள் தொடர்ந்து பராமரிப்புத் தொகையை வழங்குகின்றனர். ஆனால், மகன் மட்டும் வழங்கவில்லை என, இளமாறன் மேலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸார் அண்ணாத்துரை மீது வழக்குப் பதிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
4 hours ago
க்ரைம்
8 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago