சென்னையில் கடந்த 5 மாதங்களில் போதை வாகன ஓட்டிகளிடம் ரூ.14.64 கோடி அபராதம் வசூல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து கடந்த 5 மாதங்களில் ரூ.14.64 கோடி நிலுவை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகளை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

14,158 வழக்குகளுக்கு தீர்வு: அதன்படி, மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக, சென்னையில் கடந்த 5 மாதங்களில் நிலுவையில் இருந்த 14,158 வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.14.64 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், இதர போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக நிலுவையில் இருந்த சுமார் 2 லட்சம் வழக்குகளில் ரூ.8.42 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

371 நீதிமன்ற ஆணைகள்: இது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, ‘‘போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றங்கள் மூலம் ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே, இதுபோல போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு 371 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

8 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்