திருவள்ளூர்: திருவள்ளூர், ராஜாஜிபுரம், கலைவாணர் தெருவை சேர்ந்த அசோக் என்பவர் அவருடைய நண்பர் சுதர்சன் என்பவருடன் இணைந்து ராகவேந்திரா பார்மா டிஸ்டிரி பியூட்டர்ஸ் என்ற பெயரில் மருந்து விற்பனை ஏஜென்சியை நடத்தி வந்துள்ளார்.
இது தவிர, அவரது நண்பர் சுதர்சன் தனியாக ராம்சன் மெடிக்கல் டிஸ்டிரிபியூட்டர்ஸ் என்ற மருந்து ஏஜென்சியை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், சுதர்சன் கடந்த 2014-ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மேற்கண்ட 2 மருந்து ஏஜென்சிகளின் உரிமத்தின் பெயர்களை சுதர்சனின் மனைவி அனுராதாவின் பெயரில் மாற்றம் செய்ய அசோக் முயற்சி மேற்கொண்டார்.
இதற்காக, திருவள்ளூர் மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அலுவலகத்துக்குச் சென்று அசோக் விண்ணப்பித்தார். அப்போது, அங்கிருந்த உதவி இயக்குநர் விஜயராகவன் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து, அசோக், விஜயராகவனுக்கு லஞ்சம் தர விருப்பம் இல்லாததால், காஞ்சி ஊழல் தடுப்பு, காண்காணிப்பு பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளித்தார். விஜயராகவன் பணத்தைப் பெறும் போது கைது செய்யப்பட்டார்.
பின்னர், இவ்வழக்கை விசாரணை செய்த திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி, லஞ்சம்கேட்ட குற்றத்துக்காக விஜயராகவனுக்கு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், மேலும், புகார்தாரரிடமிருந்து லஞ்சப் பணத்தைக் கேட்டு பெற்ற குற்றத்துக்காக 2 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பை எதிர்த்து விஜயராகவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்ததோடு, விஜயராகவன் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து, திருவள்ளூர் தலைமைக் குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி ஆர்.வேலரஸ் விஜயராகவனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதன்படி, டிஎஸ்பி கலைச் செல்வம் தலைமையிலான திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
20 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
8 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago