வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கணவர் இறந்த துக்கத்தில் 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (40). இவரது மனைவி பாண்டீஸ்வரி (35). இவர்களுக்கு வைத்தீஸ்வரி (16), காளீஸ்வரி (11) ஆகிய இரு மகள்களும், விக்னேஸ்வரன் (1) என்ற மகனும் உள்ளனர். ஈஸ்வரன் விவசாயம் செய்து வந்தார். வைத்தீஸ்வரி பிளஸ் 1 வகுப்பும், காளீஸ்வரி 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரன், கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த துக்கத்தில் இருந்த பாண்டீஸ்வரி, நேற்று காலை தங்களது விவசாயக் கிணற்றில் 3 குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago