அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த பட்டதாரி கைது

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த நபரை பூக்கடை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, ராமாபுரம், 5-வது குறுக்கு தெரு, பாலாம்பிகை நகரைச் சேர்ந்தவர் தனசேகர் (28). இன்ஜினீயரிங் முடித்திருந்த இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த ஞானகருணாகரன் (46) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகமானார்.

அவர் பதிவுத் துறையில் சார் பதிவாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சென்னை, பூக்கடை பகுதியில் வைத்து ரூ.18 லட்சத்து 13,600 வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், உறுதி அளித்தபடி ஞானகருணாகரன் வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது.

எனவே இதுகுறித்து தனசேகர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், தனசேகர் மட்டுமல்லாமல் மேலும் சிலரிடமும் இதே பாணியில் பணம் பெற்று அவர் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஞானகருணாகரன் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

22 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

9 days ago

க்ரைம்

10 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

11 days ago

க்ரைம்

12 days ago

க்ரைம்

12 days ago

மேலும்