போடி: தேனி மாவட்டம், தேவாரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மனைவி மணிமாலா(38). இரு வருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. மோகிஸ் (11) என்ற மகன் உள்ளார்.
கருத்து வேறு பாடு காரணமாக இருவரும் 9 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் 2015-ம் ஆண்டு மணிமாலா போடி உரிமையியல் நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். கடந்த மாதம் 16-ம் தேதி இந்த வழக்கில் ஆஜராக வந்த மணிமாலாவை மோட்டார் சைக்கி ளில் வந்து ரமேஷ் மோத முயன்றார். அப்போது மணிமாலா தப்பினார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த வாய்தாவுக்கு வரும்போது கொலை செய்யப் போவதாக கணவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நீதி மன்றத்தில் ஆஜராகிவிட்டு மணிமாலா வெளியே வந்தார். அப் போது கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந் தவர்கள் மீட்டனர்.
விசாரணையில் கணவர் ரமேஷின் தூண்டுதலின் பேரில் அவரது நண்பர் பாண்டிதுரை காரை மோதியது தெரிய வந்தது. இது குறித்து புகாரின் பேரில் போடி நகர் போலீஸார் ரமேஷ் மற்றும் பாண்டிதுரையை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
16 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago
க்ரைம்
13 days ago