கோவை: கோவையில் பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த காதலன் கொல்லப்பட்டதால், மனமுடைந்த அவரது காத0லி தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சுந்தராபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த்(21). லோடுமேனாக பணியாற்றி வந்தார். இவரும், செட்டிபாளையம் அருகேயுள்ள மயிலாடும்பாறையைச் சேர்ந்த தன்யா(18) என்பவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்தது. அவர்கள் சில ஆண்டுகளுக்கு காத்திருக்கும்படி இருவரையும் அறிவுறுத்தியுள்ளனர்.
மதுபோதையில் வந்தார்: கடந்த 5-ம் தேதி தன்யாவுக்கு பிறந்தநாள். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக, அன்று அதிகாலை பிரசாந்த் தன் நண்பர்களுடன் மதுபோதையில் தன்யாவின் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், தன்யாவின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தன்யாவின் உறவினர் விக்னேஷ் அரிவாளால் பிரசாந்தை வெட்டினார். இதில் படுகாயமடைந்த பிரசாந்த் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.
பிறந்தநாள் வாழ்த்து கூறவந்த காதலன் உயிரிழந்த சோகத்தில் இருந்த தன்யா மறுநாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர், அவர் வீடு திரும்பினார்.
» ஆன்லைன் கேம் விபரீதம்: தாயின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.36 லட்சத்தை காலி செய்த ஹைதராபாத் சிறுவன்
» மது போதையால் விபரீதம்: தருமபுரி அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த கூலித் தொழிலாளி
2-வது முறையாக..: இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தன்யா மற்றும் அவரது பாட்டி மட்டுமே இருந்துள்ளனர். காதலன் உயிரிழந்த சோகத்தில் இருந்த தன்யா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செட்டிபாளையம் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எழுதி வைத்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
15 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago