எடப்பாடி அருகே உரிமையாளர் உறங்கியபோது வீடு புகுந்து திருடிய நபர் - போலீஸ் விசாரணை

By த.சக்திவேல்

மேட்டூர்: எடப்பாடி அருகே வீட்டின் உரிமையாளர் உறங்கி கொண்டிருக்கும்போது மர்ம நபர் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி அடுத்த கொங்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (48). இவர் வீட்டின் அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு சிவக்குமார், அவரது மனைவி மோகனா ஆகியோர் வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். வீட்டின் உள் பகுதியில் பூட்டாமல் சாத்திவைத்த நிலையில், வைத்திருந்துள்ளார். இந்நிலையில், சிவக்குமார் வீட்டை கண்காணித்த சுமார் 25 வயது மதிக்கதக்க நபர், இன்று அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர், வீட்டின் கதவை திறந்து, உள்ளே புகுந்து பீரோவில் இருந்த பணம் உள்ளிட்டவை திருடி விட்டு தப்ப முயன்றுள்ளார்.

அப்போது, சத்தம் கேட்டு எழுந்த சிவக்குமார், மர்ம நபரை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், அந்த நபரை பிடிக்க முயன்ற போது தப்பியோடிவிட்டார். ஆனால், மர்ம நபர் வந்த இரு சக்கர வாகனம், கத்தி, கடப்பாரை ஆகியவற்றை சிவக்குமார் வீட்டிலே விட்டு சென்று விட்டார். இதுகுறித்து தகவலறிந்த கொங்ணாபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்த, தடயங்களை சேகரித்தனர். பின்னர், பீரோவில் இருந்த ரூ.26,500 பணம் கொள்ளையடித்தது தெரிய வந்தது.

மர்ம நபர் வந்த வாகனம், கத்தி, கடப்பாரை ஆகியவற்றை பறிமுதல் செய்தும், வாகன எண்ணை கொண்ட விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் உறங்கி கொண்டிருக்கும் போதே வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 hours ago

க்ரைம்

18 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்