நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கடன் தொல்லை காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம் வையப்பமலை அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தச்சு தொழிலாளி நந்தகுமார் (36) கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகததால் பெற்றோருடன் வசித்து வந்தார். நந்தகுமார் தந்தை நடேசன் (65) அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை.
இச்சூழலில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நந்தகுமாருக்கு கையில் அடிபட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வறுமையின் காரணமாக செலவுகளை சமாளிக்க அக்கம் பக்கத்தில் கடன் பெற்றுள்ளனர். இதேபோல், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளனர். இவ்வாறு பல இடங்களில் வாங்கிய கடன் திருப்பி செலுத்த முடியாத நிலையில் நந்தகுமார் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, இன்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் நந்தகுமார் மற்றும் அவர்களது பெற்றோர் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த எலச்சிப்பாளையம் போலீசார் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
14 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago