கோவை: கோவையில் திருமணமான 23 நாட்களில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மத்துவராயபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய்(20). இவரும், செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணியும்(20), காதலித்தனர். கடந்த 6-ம் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி வேளாங்கண்ணி சென்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர், மத்துவராயபுரத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் ரமணி உயிரிழந்து கிடந்தார். காருண்யா நகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். ரமணியின் உடலில் காயங்கள் இருப்பதாக பெண் வீட்டார் தரப்பில் புகார் கூறப்பட்டதையடுத்து கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இதற்கிடையே, பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கழுத்துப் பகுதி இறுக்கப்பட்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரமணி உயிரிழந்தார் எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, சஞ்சய், அவரது தாய் பக்ருநிஷா, தந்தை லட்சுமணன் ஆகியோரிடம் டிஎஸ்பி ராஜபாண்டியன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தனர்.
» சேலத்தில் நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகைகள் திருட்டு - போலீஸ் தீவிர விசாரணை
» வீடு அபகரித்த வழக்கில் தம்பதிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘சஞ்சயும், ரமணியும் பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவந்தனர். இருவரும் காதலித்தபோதும், மற்றொரு மாணவியுடனும் சஞ்சய் செல்போனில் பேசி வந்துள்ளார். திருமணத்துக்கு பின்னரும் இது தொடர்ந்துள்ளது. இதையறிந்த ரமணி கணவரை கண்டித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக கடந்த 29-ம் தேதி தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுஉள்ளது. ஆத்திரமடைந்த சஞ்சய் மனைவி ரமணியை தாக்கி, துப்பட்டாவை வைத்து கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் அவர் இறந்தார்.
பின்னர், சஞ்சய், அவரது தந்தை லட்சுமணன், தாய் பக்ருநிஷா ஆகியோர் சேர்ந்து இதை தற்கொலையாக மாற்றி சித்தரித்துள்ளனர். வீட்டிலிருந்த மஞ்சளை எடுத்து ரமணியின் சடலத்தை குளிப்பாட்டியுள்ளனர். மாற்றுத் துணியை அவருக்கு பொருத்தியுள்ளனர்.
சாணிப்பவுடரை கரைத்து ரமணியின் வாயில் ஊற்றியுள்ளனர். திருமணமான 23 நாட்களில் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தொடர் விசாரணையில் 3 பேரும் சிக்கினர்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
9 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
10 days ago
க்ரைம்
11 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
12 days ago
க்ரைம்
13 days ago