புதிதாக 1,590 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,590 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 146 நாட்களில் இல்லாத அளவாகும். சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 8,601 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் மூவர், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தராகண்டில் தலா ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,30,824 ஆக உயர்ந்துள்ளது.கரோனா மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 4,47,02,257 ஆக உயர்ந்துள்ளது. இதில் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.02 சதவீதம் ஆகவும் குணமடைந்தோர் விகிதம் 98.79 சதவீதமாகவும் உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,41,62,832 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பரிசோதனையில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 1.33 சதவீதம் ஆகவும் வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 1.23 சதவீதம் ஆகவும் உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி பணியில் இதுவரை 220.65 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE