தமிழகத்தில் புதிதாக 509 பேருக்கு கரோனா பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 296, பெண்கள் 213 என மொத்தம் 509 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 103 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 83,613 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 35 லட்சத்து 40,100 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 538 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 5,466 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தோர் விவரம்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த 33-வயதான ஆண் ஒருவர் கடந்த 19-ம் தேதி இருமல், காய்ச்சல் காரணமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 26-ம் தேதி அவருக்கு கரோனா உறுதியானது. அத்துடன் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளது. இதையடுத்து 29-ம் தேதி காலை 9.30 மணி அளவில் அவர் கரோனா தீவிரம், நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 522 ஆகவும், சென்னையில் 104 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 3,805 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 38,293 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5,069 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 218.68 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE