சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 686, பெண்கள் 455 என மொத்தம் 1,141 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 247 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 50,547 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 35 லட்சத்து 01,916 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 1,530 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 10,598 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 1,211 ஆகவும், சென்னையில் 268 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வண்ணம் உள்ளது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 20,551 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 1,35,364 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
» CWG 2022 | நீளம் தாண்டுதலில் ஃபவுல் பிளே செய்தாரா ஸ்ரீசங்கர்? - ஓர் எளிய விளக்கம்
» 42 அடி நீளம்... - உலகிலேயே நீண்ட நகங்களுடன் கின்னஸில் இடம்பிடித்த பெண்: பின்புலத்தில் துயரக் கதை
21,595 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 205.59 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago