சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,232 பெண்கள் 861 என மொத்தம் 2,093 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 516 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 26,351ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 71,816 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,290 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 16,504 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் விவரம்: கோயம்புத்தூரைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர் கடந்த 13-ம் தேதி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக்கோளாறு, காய்ச்சல், இருமல் போன்ற பிர்சனைகள் இருந்துவந்த சூழலில், கரோனாவின் 5-வது நிலையை எட்டியவர், நுரையீரல் செயலிழப்பால் இன்று அதிகாலை 1 மணி அளவில் உயிரிழந்தார்.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,116 ஆகவும், சென்னையில் 528 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
» தமிழகத்தில் புதிதாக 2,116 பேருக்கு கரோனா; சென்னையில் 528 பேருக்கு பாதிப்பு
» தமிழகத்தில் புதிதாக 2,142 பேருக்கு கரோனா; சென்னையில் 561 பேருக்கு பாதிப்பு
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 21,566 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1,48,881 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18,294 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 200.91 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago