புதுடெல்லி: நாடு முழுவதும் 130 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று பாதிப்பு 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுபோல சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 1 லட்சம் தாண்டி உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் நேற்றுகாலை நிலவரப்படியான புள்ளிவிவரம் வருமாறு:
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் புதிதாக 18,819 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 130 நாட்களுக்குப் பிறகு 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோரில் 39 பேர் உயிரிழந்தனர். இதனால் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5,25,116 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,953 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 122 நாட்களுக்குப் பிறகு 1 லட்சத்தைத் தாண்டி 1,04,555 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 98.55% பேர் குணமடைந்துள்ளனர். 1.21% பேர் உயிரிழந்துள்ளனர். 0.24% பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 197.61 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோரில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் தினசரி விகிதம் 4.16% ஆகவும் வாராந்திர விகிதம் 3.72% ஆகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago