புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17,073 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 5,334 அதிகமாகும். இதன்மூலம் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 7,046 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 94,420 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாசிட்டிவ் 5.62 சதவீதமாகவும், வாராந்திர பாசிட்டிவ் 3.39 சதவீதமாகவும் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 15,208 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து குணமடைந்தோர் எண்ணிக்கை 98.58 சதவீதமாக உள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 49,646 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து இதுவரை 197 கோடியே 11 லட்சத்து 91,329 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டள்ளது. மேலும், 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 3.63 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago