புதுடெல்லி: 109 நாட்களுக்குப்பின் நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 12,000-ஐ கடந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு வீதம் 2.35 சதவீதமாக உள்ளது. 109 நாட்களுக்குப் பின் தினசரி கரோனா பாதிப்பு 12,000-ஐ கடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 4,024 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 36 சதவீதம் அதிகம். இங்கு 5 பேருக்கு பி.ஏ.5 என்ற புதிய வகை கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 58,215 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7,624 பேர் குணமடைந்துள்ளனர். வயது வந்தோரில், 89 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர்.
12 முதல் 14 வயதுக்கு உட்பட்டோரில் 75 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நாட்டில் இதுவரை மொத்தம் 195.67 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago