450-ஐ கடந்த பாதிப்பு | தமிழகத்தில் புதிதாக 476 பேருக்கு கரோனா உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 257, பெண்கள் 219 என மொத்தம் 476 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 221 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 58,445 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 18,481 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 169 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 1,938 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 332 ஆகவும், சென்னையில் 171 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் தொற்றுப் பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது. சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மூன்று மண்டலங்களில் தொற்று பாதிப்புகள் அதிகம் காணப்படுகிறது.

எனவே, சென்னையில் தினசரி பரிசோதனை 5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் கரோனா கேர் சென்டர்கள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். | வாசிக்க > “சென்னையில் தினசரி கரோனா பரிசோதனை 5,000 ஆக உயர்வு; மீண்டும் கேர் மையங்கள்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 8,822 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

53,637 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,718 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 195.5 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்