புதுடெல்லி: தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது:
இந்தியாவில் பிஏ.2 வகை கரோனாவுடன் பிஏ.4 மற்றும் பிஏ.5 ஆகியவை உள்ளன. இவை ஒமிக்ரானின் இதர வகைகளைவிட பரவும் தன்மை சற்று அதிகமானவை. ஆனால், கவலையளிக்கக் கூடிய வகையில், புதிய வகை கரோனா தொற்று எதுவும் நம் நாட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை.
கோடை விடுமுறை காரணமாக மக்களின் பயணம் அதிகரித்துள்ளதால், நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள், பொருளாதார நடவடிக்கைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாலும், சிலரிடம் தொற்று பரவுகிறது. பாதிப்பு ஏற்படுபவர்களில் பலர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். அவர்களுக்கு வழக்கமான சளி மற்றும் லேசான காய்ச்சல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் மக்கள் பீதியடைய தேவையில்லை. ஆனால், நம்மைச் சுற்றி கரோனா தொற்று உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இவ்வாறு டாக்டர் அரோரா கூறினார்.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago