புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 7,584 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
நாட்டில் தற்போது கரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,584 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 36,267 ஆக அதிகரித்துவிட்டது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 24,747 ஆக உயர்ந்துள்ளது. எனினும் நாடு முழுவதும் குணமடைந்தோர் விகிதம் 98.70 சதவீதமாக உள்ளது.
தினசரி பாசிட்டிவ் விகிதம் 2.26 சதவீதமாகவும், வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 1.50 சதவீதமாகவும் உள்ளது. கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 44,092 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நாடு முழுவதும் 194.76 கோடி டோஸ் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.
கரோனா தொற்று கடந்த ஒருவாரமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிராவில் தொற்று அதிகமாக உள்ளது. இதையடுத்து, விமானங்கள், விமான நிலையங்களில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு, ஆய்வு நடத்தும்படி மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago