ஒருநாள் கரோனா தொற்று பாதிப்பு: 84 நாட்களுக்கு பிறகு 4,000-ஐ தாண்டியது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரு நாள் கரோனா தொற்று 84 நாட்களுக்குப் பிறகு 4 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 4,041 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 84 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக 4 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,370 பேருக்கும் மகாராஷ்டிராவில் 1,045 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் ஒரு நாளில் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5,24,651 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல 2,363 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரே நாளில் 1,668 அதிகரித்து 21,177 ஆக உள்ளது.

இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆகவும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05% சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்