சென்னை: தமிழகத்தில் இன்று மொத்தம் 139 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 59 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 55,613 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 16,959 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 52 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 629 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 98 ஆகவும், சென்னையில் 44 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு சற்றே அதிகரித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் 100-ஐ கடந்துள்ளது.
இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 2,745 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.18,386 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,236 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 193.57 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் உள்ள விஐடி கல்வி நிறுவனத்தில் இதுவரை 163 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கரோனா பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறுகையில், "கேளம்பாக்கத்தில் விஐடி கல்வி நிறுவனத்தில் 163 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வடமாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களால் தொற்று பரவியது கண்டறிப்பட்டுள்ளது. கல்வி நிறுவன வளாகத்தை நேரில் ஆய்வு செய்தோம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.
» மென்மேலும் அதிகரிப்பு: தமிழகத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா பாதிப்பு
» மென்மேலும் அதிகரிப்பு: தமிழகத்தில் புதிதாக 89 பேருக்கு கரோனா பாதிப்பு
கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயம். உணவு அரங்கு , விடுதி அறை என அனைத்திலும பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு கரோனா பாதித்தவர்களில் 99% பெரை ஓமிக்ரான் பிஏ2 வகை தான் தாக்கியுள்ளது. பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளது" என்று தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago