18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88% பேருக்கு முழு டோஸ் தடுப்பூசி - அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் 88 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு எதிராக முழு டோஸ் (2 டோஸ்) தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் மாண்டவியா நேற்று தனது ட்விட்டர் பதிவில், “நாட்டில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்களில் 88 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு எதிராக முழு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மக்களுக்கு வாழ்த்துக்கள். எனினும் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

மத்திய அரசின் சமீபத்திய புள்ளிவிவரப்படி, சனிக்கிழமை காலை 7 மணி வரை நாட்டில் 193.13 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியா கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இதில் 18 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜூன் 21-ம் தேதி தொடங்கியது. தடுப்பூசி திட்டம் 15-18 வயது சிறார்களுக்கும் பிறகு 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

கரோனா தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்