சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 30, பெண்கள் 29 என மொத்தம் 59 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 26 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,984 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 16,605 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 36 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். தமிழகம் முழுவதும் 354 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 35 ஆகவும், சென்னையில் 19 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,675 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 14,841 என உள்ளது. தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை 192.52 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.75 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,635 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,00,737 என அதிகரித்துள்ளது.
முன்னதாக நேற்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 40 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அதில்தான் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு மருத்துவக் குழு அங்கு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா கண்டறியப்படும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago