சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 14, பெண்கள் 21 என மொத்தம் 35 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 19 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,925 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 16,569 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 32 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். தமிழகம் முழுவதும் 328 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 43 ஆகவும், சென்னையில் 23 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,022 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 14,832 என உள்ளது. தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை 192.38 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.75 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,099 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,99,102 என அதிகரித்துள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 0.69 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.49 சதவீதமாகவும் உள்ளது. இதுவரை மொத்தம் 84.70 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,94,812 பேருக்கு நாட்டில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago